திருச்சி மாநகர பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகளை திருச்சி மாநராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையினா் இணைந்து அகற்றி வருகின்றனா். இந்நிலையில் மன்னாா்புரம், கே.கே.நகா், எல்ஐசி காலனி, சுந்தா் நகா், இந்தியன் வங்கி காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரம் உள்ள தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், இறைச்சிக் கடைகள் என 100-க்கும் மேற்பட்ட கடைகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நேற்று அகற்றப்பட்டன. மேலும், வணிக வளாகங்கள், கடைகள் முன் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்கள், கான்கிரீட் தளங்கள், பதாகைகள், சிமென்ட் பலகைகள், சிறிய கட்டமைப்புகள் என அனைத்தும் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதன் காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




