செங்கோட்டை, ஜார்ஜ் கோட்டையை விட பழமையான திருச்சி மலைக்கோட்டை, திமுகவின் கோட்டையாக உள்ளது – திருச்சியில் கமலஹாசன் பேட்டி!

0

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிடுகின்றது. இதில் திருச்சி வேட்பாளராக துரைவைகோ போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து இன்று மாலை மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்ய உள்ளார்.

 

 

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த கமலஹாசனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வரவேற்றனர்.

 

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமலஹாசன் கூறுகையில்….

 

 

Bismi

தேர்தல் ரொம்ப சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பழைய கோட்டைகளில் ஒன்று செங்கோட்டை, பாரத பிரதமர் யாராக இருந்தாலும் அங்கிருந்து தான் பேசுவார்கள். அதற்கும் மூத்தது செயின்ட்ஜார்ஜ் கோட்டை. இரண்டுக்கும் மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அந்த மலைக்கோட்டை திமுக கோட்டையாக உள்ளது. அந்த கோட்டையில் எனக்கு கதவுகள் திறந்து இருக்கிறது. நான் வந்திருக்கிறேன் நாட்டை காக்கும் வேள்வியில் நானும் அங்கே உள்ளேன்.

திருச்சி திருப்பு முனை என்று கூறுவார்களே என்ற கேள்விக்கு?

மிகையான வார்த்தை அல்ல, நேர்மையான நம்பிக்கை என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்