திருச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் – விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

0

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் சுயேச்சைகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

 

 

Bismi

 

அந்த வகையில் திருச்சியில் அரசு உதவி பெறும் இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் வாக்குப்பதிவு நாள் அன்று திருச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய வரைபடத்தில் மூவர்ண அழியாத மை கொண்ட கை உருவம் பொறித்த படத்தை சுற்றி நின்றபடி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி நிர்வாக குழு தலைவர் ராகவன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் உமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் வெங்கடேசன், பார்த்திபன், சிவகணேசன், விஜயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்