ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக சென்று, ஜங்ஷன் அருகிலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- Advertisement -

இந்நிகழ்வில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், பொருளாளர் முரளி, மாவட்டத் துணைத் தலைவர் சத்தியநாதன், ஓ. பி .சி .பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல் உள்பட மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்