திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருமயத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் பெயரை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயர் இடம் பெற்றிருந்ததை பிஜேபி அரசு எடுக்க முயற்சிக்கும் இத்திட்டத்தை கைவிடக்கோரி இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புரம் தலைமையில் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் பொன்னமராவதி பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கை.காமராஜ்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோலையப்பன் ,வட்டாரத் தலைவர் கிரிதரன் ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன்,நகர பொருளாளர் பாலுசாமி, ஆசிரியர் தெற்கு மாவட்ட வடக்கு வட்டார தலைவர் எம் முருகேசன் ,ஊடகப்பிரிவு கே.ஆர்.மாணிக்கவேல்,ராஜேந்திரன், ஆறுமுகம் ,சுரேஷ், சிவகுமார் , வெள்ளைச்சாமி முருகேசன், முத்தையா ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் ,பிரபு ,நகரத் தலைவர் அன்பழகன் மெய்யர் சகாயம் ,மாவட்ட செயலாளர் கண்ணையா ராதா டெய்லர்,மாவட்ட மகளிர் அணி தலைவி சிவந்தி நடராஜன் ,வட்டார மகளிர் அணி தலைவி தவமணி பாண்டியன் ,நகர மகளிர் அணி தலைவி அமராவதி ,சிறுபான்மை பிரிவு செபஸ்தியான் பிடி ஜான் ,வட்டார துணைத் தலைவர் முத்தையா ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னகருப்பன்,மாவட்ட கலை பிரிவு தலைவர் மயில்வாகனன்,மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் தி. தொ. மாதுத எஸ் அப்துல் கலாம் ஆனந்தன், கலைப் பிரிவு தலைவர் எம் சிங்காரம் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த பெரியோர்கள் மாநில மாவட்ட வட்டார நகர கிளை நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாக கலந்து கொண்டனர்.


Comments are closed.