நபிகள் நாயகம் பிறந்த தினவிழா, அரபி மதரஸா ஆண்டு விழா, பட்டிமன்றம்- ஆகிய முப்பெரும் விழா!- திருநெல்வேலி
நபிகள் நாயகம் பிறந்த தினவிழா, அரபி மதரஸா ஆண்டு விழா, பட்டிமன்றம்- ஆகிய முப்பெரும் விழா!- திருநெல்வேலி

திருநெல்வேலி புறநகர் மாவட்டம்


கல்லிடைக்குறிச்சியில், நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த தினவிழா!, நூருல் ஹிதாயா அரபி மதரஸாவின் 36-வது ஆண்டு விழா! மற்றும் ரஹ்மத்துல்லாஹ் அப்பா கந்தூரி விழா! ஆகிய, முப்பெரும் விழா நேற்று (செப்டம்பர். 5) மாலையில், நடைபெற்றது.
விழாவுக்கு, ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அ. நாகூர்மீரான், தணிக்கையாளர் முகம்மது உசேன், பொருளாளர் என். அஜீஸ் மற்றும் இதர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகைதீன் பள்ளிவாசல் இமாம் பி. முஹம்மது இத்ரீஸ் கிராஅத் ஓதினார். சிறப்பு அழைப்பாளர்களாக களக்காடு மருத்துவர் பி. ஆதம் ஷேக்அலி, வழக்குரைஞர் எம். பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினர். மதரஸா மாணவ- மாணவிகளின் சொற்பொழிவுகள், குறு நாடகங்கள், உரையாடல்கள் போன்ற, பல்சுவை நிகழ்ச்சிகளும், இந்த விழாவில் நடைபெற்றன. முன்னதாக மதரஸா மாணவ- மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம், வடக்குத் தைக்கால் தெரு மதரஸாவில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து, விழா நடைபெறும் தெற்கு தைக்கால் தெருவில் நிறைவு பெற்றது. ஜமாத்தார்கள், ஊர்மக்கள் கலந்துகொண்டனர். நிறைவாக, மதரஸா மாணவ-மாணவிகள் பங்கேற்ற, “உயர்ந்த வாழ்க்கைக்கு, உறுதுணையாக இருப்பது கல்வியா? செல்வமா? என்னும் தலைப்பில், விறுவிறுப்பான பட்டிமன்றம் நடைபெற்றது. நூருல்ஹிதாயா அரபி மதரஸா முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் நடுவராக பணியாற்றினார். “கல்வியே!” என்னும் தலைப்பில், மாணவிகள் ரெஸ்பின் பாத்திமா, நபிலா ஆகியோரும், “செல்வமே!” என்னும் தலைப்பில், மாணவர்கள் அஸ்லம் அஹமத், அஷ்வாக் அஹ்மத் ஆகியோரும், திறம்பட வாதிட்டனர். முன்னதாக, ரஹ்மத் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஸம்மில், அனைவரையும் அன்புடன் வரவேற்றார். நிகழ்ச்சியை, துணை இமாம் அ. தாஜூதீன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில், ஜமாஅத் செயலர் அ. ஷேக் செய்யது அலி, அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருநெலவேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.





Comments are closed.