பிரதமர் மோடி-நீரஜ் சோப்ரா சந்திப்பு!
பிரதமர் மோடி-நீரஜ் சோப்ரா சந்திப்பு!
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 27. கடந்த 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் பதக்கங்கள் வென்றார். இந்த ஆண்டு தோஹா டைமண்ட் லீக் தொடரில், தனது கனவு இலக்கான 90.23 மீ. துாரம் ஈட்டி எறிந்து அசத்தினார். இவருக்கு ராணுவத்தில் கவுரவ ‘லெப்டினன்ட் கர்னல்’ அந்தஸ்து வழங்கி கவுரவிக்கப்பட்டது.நேற்று(டிசம்பர் 23) நீரஜ் சோப்ரா தனது மனைவி ஹிமானி மோர் உடன் பிரதமர் மோடியை, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லமான ‘லோக் கல்யாண் மார்க்’கில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,’ நீரஜ் சோப்ரா, அவரது மனைவியை சந்தித்தேன்.
விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் பற்றி சிறப்பாக கலந்துரையாடினோம்,’ என தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,’எங்களை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி. விளையாட்டுத் துறை மீதான அவரது தொலைநோக்குப் பார்வையும் ஆதரவும் இந்தியர்களுக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும்,’ என தெரிவித்துள்ளார்.


Comments are closed.