3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் -பிரதமர் மோடி

ஜி20 உச்சி மாநாடு.

3 நாள் பயணமாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் -பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாடு.

ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், பங்கேற்க டெல்லியில் இருந்து மோடி புறப்பட்டு சென்றார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.அதில் காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.

Bismi

மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.முன்னதாக இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 21) காலை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வேன்.

ஆப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு. பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்திப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்