பிரதமர் மோடி ,ஜோர்டான் பட்டத்து இளவரசரும் அரண்மனைக்கு ஒரே காரில் பயணம்.

பிரதமர் மோடி ,ஜோர்டான் பட்டத்து இளவரசரும் அரண்மனைக்கு ஒரே காரில் பயணம்.

Bismi

4 நாட்கள் அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி ஜோர்டான் சென்றுள்ளார். நேற்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், ஜோர்டான் விமான நிலையம் சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை ,அவரது அரண்மனையில் சந்தித்து பேசியிருந்தார்.இந்நிலையில் இன்று (டிசம்பர் 16)
ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர் என தகவல் .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்