போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

 

 

நாட்டில், குறிப்பாக இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். இச்சிக்கலை எதிர்கொள்ளும் நோக்கில், தமிழக அரசின் போதை பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் விழிப்புணர்வு “உறுதிமொழி ஏற்பு” நிகழ்ச்சி, (ஆகஸ்ட். 11) காலையில், திருநெல்வேலி அபிசேகப்பட்டியில் உள்ள “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

Bismi

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர் ஜே. சாக்ரட்டீஸ், தலைமை வகித்தார். இதில், மாணவ-மாணவிகள், பேராசிரிய பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் பங்கேற்று, சமூக நலனுக்கான மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்தும், இளையோரை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி, ஆரோக்கியமான மற்றும் சமூகத்திற்கு பயனுள்ள குடிமக்களாக உருவாக்குவது குறித்தும், இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்