தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு!
தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவதை தடுக்க வழிவகை செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு!

தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க பொதுசெயலாளர் முத்துவேல் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தில் பணியாற்றக் கூடிய மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மீது எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், விசாரணை அழைப்பாணை கொடுக்காமலும், விசாரணை என்ற பெயரில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் மற்றும் குடும்ப சூழ்நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.