பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருகை மற்றும் வெளியேறும் வழித்தடம் ஆகிய பகுதிகளை தல ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகர காவல் துணை ஆணையர் செல்வக்குமார், நகரப்பொறியாளர் சிவபாதம், திட்ட இயக்குநர் தேசிய நெடுஞ்சாலை பிரவீன் குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டலத்தின் பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் வணிகம் சாமிநாதன், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்