பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை,” தமிழ் அறிஞர்” தொ.பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு! 

பாளையங்கோட்டை வடக்கு ஹைகிரவுண்ட் சாலை,” தமிழ் அறிஞர்” தொ.பரமசிவன் சாலை என்று அழைக்கப்படும்! மாநகராட்சி கூட்டத்தில், மேயர் ராம கிருஷ்ணன் அறிவிப்பு!

 

 

திருநெல்வேலி மாநகராட்சி, மைய அலுவலக ராஜாஜி மண்டபத்தில், “மாமன்ற கூட்டம்” இன்று (அக்டோபர். 10)காலையில், மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில், ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மேயர் பேசுகையில்:-

Bismi

“திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலம், தமிழறிஞர் தொ.பரமசிவன், பாளையங் கோட்டையில் படித்த பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவை அமைந்துள்ள, வடக்கு ஹைகிரவுண்ட் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளது. இதில், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், கட்டபொம்மன் சிலை ரவுண்டானா முதல், தூய சவேரியார் கல்லூரியை அடுத்துள்ள, மரியா கேண்டீன் சந்திப்பு வரையுள்ள, சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு சாலைக்கு மட்டும், தமிழ் அறிஞர், பேராசிரியர் தொ. பரமசிவன் சாலை என்று பெயரிடப்படும். தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித் துறை அமைச்சர்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் ஆகியோரின் ஒத்துழைப்புடன், 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோகுலவாணி, 13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர் சங்கர்குமார் ஆகியோரின் வேண்டுகோள்களுக்கு இணங்க, இந்த சிறப்பு தீர்மானம், இன்றைய மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில், மாசுப்படுவது தவிர்க்கப்பட்டு, சுத்தமான காற்றுடன் வாழ வழிவகை ஏற்படுத்தும் விதமாக, நான்கு மண்டல பகுதிகளிலும், மனைப்பிரிவு அனுமதி கோரும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கட்டிடப் பகுதியில், மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படமாக எடுத்து, அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும்! என்னும் தீர்மானமும், இன்றைய கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், இன்று (அக்டோபர். 10) முதல், உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப் படுகிறது!”-இவ்வாறு, மேயர் பேசினார். முன்னதாக, கரூர் மாவட்டத்தில், சென்ற மாதம் (செப்டம்பர்) 27-ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில், எதிர்பாராதவிதமாக 41 நபர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததற்கு,”மவுன அஞ்சலி” செலுத்தப்பட்டது. இந்த

கூட்டத்தில், மண்டல தலைவர்கள், பாளையங்கோட்டை பிரான்சிஸ், தச்சநல்லூர் ரேவதி பிரபு, மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், உதவி ஆணையாளர்கள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்