திருநெல்வேலி மாவட்டத்தில்,விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில்,விடியல் பயணம் திட்டத்தின் மூலம், நகரப் பேருந்துகளில் 18,76,98,703 மகளிர் பயணம் செய்து, பயன் பெற்றுள்ளனர்! மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தகவல்!

Bismi

 

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (அக்டோபர்.10) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-“தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முதலமைச்சர் தன்னுடைய முதல் கையெழுத்தாக, “விடியல் பயணம் திட்டம்”என்னும் புதிய திட்டத்தை, துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம், அரசு நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும், இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்! என்றும்,

ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், பயணிக்கலாம்! என்றும், அறிவித்தார். வேலைக்கு செல்லும் மகளிருக்கு, இந்த புதிய திட்டம் மிகவும் பெரிய பயனுள்ளதாக, அமைந்துள்ளது. அதன் காரணமாக, அனைத்து மகளிரும், இந்த திட்டத்தினை, மனமுவந்து வரவேற்று வருகின்றனர். இத்திட்டம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு, முன் மாதிரி திட்டமாக திகழ்ந்து வருகிறது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை,

திருநெல்வேலி மாவட்டத்தில், 2021-2022 ஆம் ஆண்டில், 1,93,02,605 மகளிரும், 2022-2023 -ஆம் ஆண்டில், 3, 46,26,645 மகளிரும், 2023-2024 – ஆம் ஆண்டில், 4,25,53,959 மகளிரும், 2024-2025 -ஆம் ஆண்டில், 5,38,69,313 மகளிரும், நடப்பு 2025-2026 -ஆம் ஆண்டில், சென்ற மாதம் (செப்டம்பர்) வரை 373,46,181 மகளிரும், என, கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், மொத்தம் 18,76,98,703 மகளிர், பயன்பெற்று உள்ளனர். இந்த திட்டம் மகளிருக்கு ஒரு சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இத்திட்டத்தினால் பயன்பெற்ற நெல்லை மாவடட மகளிர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தங்களுடைய நன்றியினை, தெரிவித்துள்ளனர்.

“விடியல் பயணம்” திட்டத்தின் கீழ் பயன்பெற்ற,,பயனாளிகள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அவற்றுள், ஒருவரான பார்வதி கூறியதாவது:-

“எனது பெயர் பார்வதி. நான், கொண்டாநகரம் பகுதியில் வசித்து வருகிற நான், தனியார் நிறுவனம் ஒன்றில், பணிபுரிந்து வருகிறேன். எங்கள் ஊர் “கொண்டாநகரம்” பகுதியில் இருந்து, பேருந்தில் சென்று வருவேன். எனது மாத சம்பளத்தில், ‌ஒரு பாதி பேருந்திற்கு என, செலவாகி வந்தது. தமிழ்நாடு முதலமைச்சரின விடியல் பயணம் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார்கள். விடியல் பயணம் திட்டத்தின் மூலம் நகரப் பேருந்துகளில், ஒரு நாளிற்கு எத்தனை முறையானாலும் பயணிக்கலாம்! என்று அறிவித்தார்கள். கொண்டாநகரம் பகுதியில் உள்ள பெண்கள் அதிகம் பேர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடியல் பயணத் திட்டம் அவர்களுக்கு மிகவும் மகளிர்களுக்கு இத்திட்டம், பெரிய அளவில், மிகவும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தினால், நாங்கள் வாங்கும் சம்பளம், பேருந்துக்கு செலவு இல்லாமல் மிச்சப்படுகிறது. அந்த பணத்தை, நாங்கள் அதிக அளவில், சேமித்து பயனடைந்து வருகிறோம். விடியல் பயணத்திட்டத்தை, ‌ சிறப்பாக செயல்படுத்தி வரும், நமது தமிழ்நாடு முதலமைச்சருக்கு, எங்கள் நன்றியை காணிக்கையாக்கி கொள்கின்றோம்!”- இவ்வாறு, பயனாளி தெரிவித்தார்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்