திருச்சியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தலைமையில் நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் வழங்குகிறார்
திருச்சியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தலைமையில் நலத்திட்ட உதவிகள் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் வழங்குகிறார்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (செவ்வாய்க்கிழமை)
காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்திந்திய தேவர் பேரவை தலைவரும் முன்னாள் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவருமான கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்குகிறார். மாநகர் மாவட்ட முன்னாள் அதிமுக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலருமான தமிழரசி சுப்பையா பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், அனைத்திந்திய தேவர் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கே. எஸ்.சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா மற்றும் டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Comments are closed.