இனியாவது எந்த அரசியலும் பார்க்காமல் மத்திய அரசு கல்விக்கான நிதியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

இனியாவது எந்த அரசியலும் பார்க்காமல் மத்திய அரசு கல்விக்கான நிதியை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

பள்ளி மாணவ மாணவியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இன்று கைப்பந்து போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைத்தார்.

Bismi

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் :

 

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து ஆராய்ந்து தேவைப்பட்டால் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.இக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. அவர்கள் முறையாக ஒதுக்கியிருந்தால் சராசரியாக 60 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள். மத்திய அரசு நிதியை ஒதுக்காவிட்டாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கியது.

இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், விளையாட்டு துறை அதிகாரிகள உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்