திருச்சியில் அழகு நிலையத்தை காலி செய்யக்கோரி மிரட்டல் விடுத்த கட்டிட உரிமையாளர் மீது காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு!
திருச்சியில் முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை சேதப்படுத்தியதாகவும் அழகு நிலையத்தை காலி செய்ய வலியுறுத்தி மிரட்டல் விடுப்பதாகவும், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையின் உரிமையாளர் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் அகல்கி அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. அழகு நிலையத்தின் உரிமையாளர் தேவி முன் தொகை 2 லட்சம் ரூபாய் கொடுத்து, 12 வருடங்களாக இங்கு மாதம் வாடகை கொடுத்து அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டிடத்தை மேம்படுத்துவதாக கூறி கட்டிடத்தின் உரிமையாளர் சில நாட்கள் நேரம் கேட்டு உள்ளார். அதுவரை அங்கு எந்த பணியும் நடைபெற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். ஆனால் தற்போது வரை அவர் மேம்படுத்தி கொடுக்கவில்லை. அதற்கு மாறாக மாதம் வாடகை கொடுக்கப்பட்டு, முன் தொகை குத்தகை காலம் 2028 வரை இருக்கும் நிலையில் கடையை காலி செய்வதற்கு வற்புறுத்துவதோடு அந்த கடையை இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.


மேலும் குத்தகை பணத்தை திரும்ப தர மாட்டோம் என்பதுடன் உள்ளே உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து அழகு நிலையத்தின் உரிமையாளர் தேவி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கடையின் உரிமையாளர் குத்தகை காலம் இருப்பதால் கடையை நடத்திக் கொள்ளுங்கள் எனக் கூறி இருக்கிறார். அதன் பின்னர் அழகு நிலையத்தில் ஊழியர்கள் இருக்கும்போதே கடையினை இடித்து சேதப்படுத்தி இருக்கின்றனர்.

இது தொடர்பாக கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது பணத்தை கொடுக்க இயலாது, யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என மிரட்டல் விடும் தொணியில் பேசி இருக்கிறார். இது தொடர்பாக அலகு நிலையத்தின் உரிமையாளர் தேவி ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். முன் தொகையாக கொடுக்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் பணமும் அதனை தொடர்ந்து அழகு நிலையத்தில் இடித்து உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.


Comments are closed.