திருச்சியில் நவ.30 விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.