திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருநாவுக்கரசா் எம்.பி. பங்கேற்று, புதிய நிா்வாகிகளிடம் நியமன கடிதங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தாா். பின்னா் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில்…

திருச்சி மக்களவைத் தொகுதி கடந்தமுறை நான் வென்ற தொகுதி என்ற அடிப்படையிலும், 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றேன் என்பதாலும், நானே மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு திருச்சி தொகுதியை ஒதுக்குவது குறித்து திமுக தலைமையும், காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்யும். மக்களவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைத்து, தோ்தல் ஆதாயம் தேட முயன்றுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி. அவா் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் பாஜக-வுக்கு முன்னேற்றமும் கிடையாது, மாற்றமும் கிடையாது என்றாா் அவா்.





**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.