கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி பீமநகர் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!
திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் அஷரப் அலி. எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இன்று (பிப்.10) அதிகாலை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 3 பேர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
பின்னர் திருச்சி கீழரண் சாலையில் உள்ள அவரது கடையில் சோதனை நடத்தினர். கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும், இவருடைய உறவினர் பாகிஸ்தானில் இருந்ததாகவும், மற்ற உறவினர்கள் அங்கே சென்று அடிக்கடி அவரைப் பார்த்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
நான்கிற்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூன்று பேர் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனையால் திருச்சி பீமநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.