- Advertisement -

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் சுற்றி பக்தர்கள் வினோத நேர்த்திகடன் செலுத்தினர்

0

- Advertisement -

நாகப்பட்டினம் பிரசித்திபெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் சுற்றி பக்தர்கள் வினோத நேர்த்திகடன் செலுத்தினர்

Bismi

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இவ்வாலயத்தின் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா 29ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் துவங்கியது அதனை தொடர்ந்து இக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஞாயிற்று கிழமை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் செடில் மரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்படுவதால் நாளை காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது. தொடர்ந்து நெல்லுககடைமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வர நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதை போல் பக்தர்கள் மாவிளக்கு வைத்து படையலிட்டும்; பால்காவடி, பன்னீர்காவடி, வேப்பில்லை காவடி, மற்றும் பாடைக்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளோடு நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயத்தில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்