- Advertisement -

தேசிய விண்வெளி தினம் – தேசியக் கல்லூரியில் மாணவர்களை விண்வெளி அறிவியலுக்குத் தூண்டிய போட்டிகளுடன் நினைவுகூரப்பட்டது

- Advertisement -

தேசிய விண்வெளி தினம் – தேசியக் கல்லூரியில் மாணவர்களை விண்வெளி அறிவியலுக்குத் தூண்டிய போட்டிகளுடன் நினைவுகூரப்பட்டது

திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை & ஆராய்ச்சி துறை, ஆகஸ்ட் 25 அன்று தேசிய விண்வெளி தினம் (NSpD-2025)-ஐ மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Bismi

இந்நிகழ்ச்சி, கல்லூரி இடைக்கால முதல்வர் மேஜர் டாக்டர். டி. முத்துராமகிருஷ்ணன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். துறைத் தலைவர் டாக்டர். டி.வி. சுந்தர் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின் துறை வரலாற்றையும், போட்டி நிகழ்வுகளையும் டாக்டர். எஸ். குமரேசன், இணைப் பேராசிரியர் விவரித்தார். டாக்டர். எம். ஐயனார், இணைப் பேராசிரியர் இந்நாளின் முக்கியத்துவத்தை விளக்கி, இளம் மாணவர்களை ஆராய்ச்சி நோக்கில், குறிப்பாக விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி எடுத்துரைத்தார். மைம், பேச்சுப்போட்டி, கட்டுரை/கவிதை எழுத்து, போஸ்டர்/மாதிரி காட்சிகள், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Vagai

மாலை நடைபெற்ற நிறைவுவிழாவில், துணை முதல்வர் (உதவித்துறை) டாக்டர். எம். முரளி தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சி, இயற்பியல் துறையின் சிறப்புமிகு பாரம்பரியத்தையும், மாணவர்கள் விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் தொழில்முனைவு வாய்ப்புகளை ஆராயத் தூண்டுவதாகவும் திகழ்ந்தது. இந்நிகழ்வின் இறுதியில் இணை பேராசிரியர் டாக்டர். எம். ஐயனார் நன்றியுரை வழங்கினார்.

 

 

 

 

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்