நாகூர் ஆண்டவர் தர்ஹா கந்தூரி விழா – 3 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு – திருச்சி கோட்ட ரயில்வே அறிவிப்பு!

0

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் ஆண்டவர் தர்ஹாவின் 467 வது கந்தூரி விழாவை யொட்டி பொது மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மூன்று ரயில்களில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் கந்தூரி விழா கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, திருச்சி – காரைக்கால் (06490), காரைக்கால் – தஞ்சாவூா் (06457), தஞ்சாவூா் – திருச்சி (06683) ஆகிய முன் பதிவற்ற ரயில்களில் டிச. 22, 23, 24 ஆகிய தேதிகளில் (3 நாள்கள்) கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (முன்பதிவற்ற பெட்டிகள்) இணைக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்