அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி நிறுவனருக்கு அன்னை தெரசா விருது!
அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி நிறுவனருக்கு அன்னை தெரசா விருது!
திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் சமய நல்லிணக்கம் சமுதாய ஒற்றுமை மனித நேயத்திற்காக செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் நோயற்ற சமுதாயத்தை உருவாக்க அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி நிறுவன தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியனுக்கு அன்னை தெரசா விருதினை ஜே.கே.சி.அறக்கட்டளை ஐ.சி.எப்.பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் வழங்கினார்.அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ் முன்னிலை வகித்தார்.ஐ.சி.எப். மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ்,
கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.அன்னை தெரசா விருது பெற்ற

அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி நிறுவன தலைவர் கே எஸ் சுப்பையா பாண்டியன் பேசுகையில்,பழங்கால இந்திய மருத்துவ முறை, மூலிகைகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பயன்படுத்துகிறது.
பண்டைய தமிழ் பாரம்பரிய மருத்துவ முறை, மூலிகைகள், தாதுக்கள் மற்றும் விலங்குப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டது.
குத்தூசி மருத்துவத்தில் உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய குத்து ஊசிகளைச் செருகுவதன் மூலம் ஆற்றலைச் சமநிலைப்படுத்தலாம்.யோகா, தியானம் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கலாம்.மன அழுத்தத்தைக் குறைத்து, உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.மூலிகை மருத்துவம் தாவரங்களிலிருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துப்படுகிறது.அரோமா தெரபி நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தி உடல் மற்றும் மன நலனைப் பாதுகாக்கலாம்.
மாற்று முறை மருத்துவ அணுகு முறையானது உடலின் அனைத்துப் பகுதிகளையும் இணைத்து, நோய்க்கான மூல காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதாகும்
பக்க விளைவுகள் குறைவு.பல முறைகள் இயற்கை சார்ந்தவை என்பதால், பக்க விளைவுகள் குறைவாக இருக்கும் என்றார்.


Comments are closed.