2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான முன்களப் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளராக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொகுதி முழுவதும் பூத் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி மலைக்கோட்டை மண்டல் சறுக்குபாறை பகுதியில் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” என்னும் சுவர் விளம்பரம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தொகுதி இணை பொறுப்பாளர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்து கொண்டு சுவர் விளம்பரத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஒண்டி முத்து, பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எஸ்.வி. வெங்கடேசன் எனும் சுதாகர், மலைக்கோட்டை மண்டல் தலைவர் ஜெயேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர்கள் ராம் திலக் மற்றும் சதீஷ், கிளை தலைவர் மாது, துணைத் தலைவர் பரமேஸ்வரன் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.