8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்!

8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலியில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வைத்த, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்!

திருநெல்வேலி,டிசம்பர் 2:-

Bismi

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மாவட்டம் முழுவதும், புதிய பேருந்துகள் 47, புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் 39 உட்பட, நகரப்பேருந்துகள் மொத்தம் 166 இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தொடர்ந்து, மொத்தம் 8 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள, 14 புதிய பேருந்துகளை, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு. அப்துல் வகாப், நேற்று ( டிசம்பர். 2) காலையில், திருநெல்வேலி சந்திப்பு “தந்தை பெரியார்” மத்திய (பழைய) பேருந்து நிலையத்திலிருந்து, “பச்சைக்கொடி” அசைத்து, துவக்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள், திருநெல்வேலி சந்திப்பு மற்றும் திருநெல்வேலி டவுண் பகுதிகளிலிருந்து களக்குடி, கல் குறிசசி, தெற்கு செழியநல்லூர், மணப்படைவீடு, பற்பநாதபுரம், சாந்தி நகர், பூவாணி, கட்டபொம்மன் குடியிருப்பு, குப்பக்குறிச்சி, வீரவநல்லூர், மேலச்செவல், சேரன்மகாதேவி ஆகிய ஊர்களுக்கு, இயக்கப்படுகிறது. துவக்க விழாவில், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சுகுமார், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டலத்தலைவர்கள் திருநெல்வேலி மகேசுவரி, தச்சநல்லூர் ரேவதி பிரபு, மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், வண்ணார் பேட்டை கந்தன், மீனாட்சிபுரம் சுதா மூர்த்தி, பெருமாள்புரம் ஜூலியட் சகாய மேரி, ராஜேசுவரி, கருப்பசாமி ஆகியோர் உட்பட, பலரும் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்