திருச்சியில் “KONCEPT TURF” உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு!

திருச்சி காவேரி பாலம் அருகே ஓயாமாரி பகுதியில் “KONCEPT TURF” எனும் உன் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் தொண்டர்கள் கேட்டு கொண்டதற்கினங்க அமைச்சர் நேரு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதனை கண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் கமால் முஸ்தபா, சிந்தை பாலமுருகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை
மத்திய மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் தென்னூர் ஜாவித் சிராஜ் செய்திருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்