மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருச்சியில் கொடியேற்று விழா மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.