- Advertisement -

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நிறுவிய தினம் கொண்டாட்டம்! துணை வேந்தர், பேராசிரியப் பெருமக்கள், சுந்தரனார் திருவுருவச்சிலைக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை!- திருநெல்வேலி

- Advertisement -

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நிறுவிய தினம் கொண்டாட்டம்! துணை வேந்தர், பேராசிரியப் பெருமக்கள், சுந்தரனார் திருவுருவச்சிலைக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை!- திருநெல்வேலி

Bismi


திருநெல்வேலியில், 1990- ஆம் ஆண்டு, இதே நாளில் (செப்டம்பர். 7) “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அதனை நினைவு கூறும் வகையில், இன்று ( செப்டம்பர். 7) காலையில், அப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள அபிஷேகப்பட்டி பல்கலைக்கழக வளாகத்தில், “நிறுவன தினம்” மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. “பல்கலைக்கழக துணைவேந்தர்” பேராசிரியர் “முனைவர்” ந.சந்திரசேகர் தலைமையில், பேராசிரியப் பெருமக்கள், மாணவ-மாணவிகள், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, பல்கலைக்கழக நுழைவாயில் அருகே நிறுவப்பட்டிருக்கும், பெருமைக்குரிய “தமிழ் அறிஞர்” மனோன்மணியம் சுந்தரனாரின் திருவுருவச்சிலைக்கு, “மலர் மாலை” அணிவித்து, ஒட்டு மொத்தமாக, “மரியாதை” செலுத்தினர். அதனைத் தொடர்ந்து,
நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பேராசிரியப் பெருமக்கள், மாணவ- மாணவியர்கள் ஆகியோர்,”கல்வி, ஆராய்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில், இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னணியில் நிலைத்து நிற்க, உறுதுணையாக இருப்போம்!” என்னும் “உறுதி மொழி”யினை, எடுத்துக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்