- Advertisement -

மணல் கொள்ளையை தடுத்து காவிரியை பாதுகாப்போம் – காவிரி ஆற்றில் உறுதிமொழி ஏற்று அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் நூதன பிரச்சாரம்!

0

- Advertisement -

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமம் கிராமமாக சென்று பொது மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு பொது மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

Bismi

இந்நிலையில் திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருடன் இறங்கிய வேட்பாளர் செந்தில்நாதன் காவிரியை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்று நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காவிரியைக் காப்போம், இயற்கை வளங்களைக் காப்போம். மணல் கொள்ளையைத் தடுப்போம். மணல் கொள்ளையா்களை எதிா்ப்போம். கடத்தல்காரா்களிடமிருந்து இயற்கையை மீட்போம். தமிழா் விரோதிகளை எதிா்ப்போம். இழந்த பெருமையை மீட்போம், திருச்சியைக் காப்போம். தமிழகத்தைக் காப்போம். தாய் திருநாடாம் பாரதத்தைக் காப்போம் என்ற முழக்கங்களுடன் அனைவரும் உறதிமொழியேற்றனா்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்