மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டது – திருச்சியில் முதல்வர் பேச்சு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுதுறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்…

Bismi

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சாரண சாரணிய இயக்கத்தின் தலைமை அலுவலகம் ரூபாய் பத்து கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். அத்துடன் சாரண சாரணிய இயக்க பயிற்சி அலுவலகமும் அமைக்கப்படும் என அறிவித்தார்.

நம் அனைவரும் நிலம் மீதான பற்றை தாண்டி மனிதர்கள் மீது பற்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்