முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகர திமுக செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக வழக்கறிஞர் அணி மாநகர அமைப்பாளர் பன்னீர்செல்வன், வட்டச் செயலாளர் வரதராஜன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். கூட்டத்தில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், குணசேகரன், சபியுல்லா, மாநில அணி செயலாளர் மாமன்ற உறுப்பினர் என்.செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஆட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில்
மாவட்ட விவசாய அணி செயலாளர் கோ.ரமேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநகர அமைப்பாளர்
டி.செந்தில், வட்ட செயலாளர் ஜமால் முகமது ஆகியோர் நன்றி கூறினார்கள்.