ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா
ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா

திருமயம் மேலூர் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாட ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக சர்க்கரை பொங்கல் புளியோதரை சுண்டல் ஆகிய உணவு வகைகள் தயார் செய்து அத்துடன் ஜெய் வீர ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து அதை பிரசாதமாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது மேலும் ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் உருவான காலத்தில் இருந்து ஜெய் வீர ஆஞ்சநேயரை பொதுமக்களும் பக்தர்களும் தினமும் திரளாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் அத்துடன் இக்கோவிலின் அருகில் அரச மரத்து அடியில் ராஜ விநாயகர் கோவில் கட்டப்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் ராஜ விநாயகரின் வழிபட்டு வருகின்றனர் இவர்கள் இருவருடைய கோவிலும் அங்கே வீற்றிறுப்பது மிக மிக சிறப்பு அம்சமாகும் வருடந்தோறும் அனுமன் ஜெயந்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல் விநாயகர் சதுர்த்தி அன்று ராஜ விநாயகருக்கும் அபிஷேக ஆராதனை தீப ஆராதனை நடைபெற்று அதற்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது மேலும் ஜெய் வீர ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை இது ஒரு வெண்ணை சாத்தி தீபாராதனை நடைபெற்று வருகிறது இக்கோவிலுக்கு பூசகர் மிகச் சிறப்பாக பூசை செய்து வருகின்றார் பொதுமக்களும் பக்தர்களும் அவர்களுக்கு தேவையானவைகளை வேண்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள் பக்தர்கள் இதனை அறிந்து ஒருமுறை விஜயம் செய்து அவர்களுடைய அருளைப் பெற வேண்டுமென சமூக ஆர்வலர்களும் ஊர் பொதுமக்களும் வேண்டி கேட்டுக்கொள்கின்றனர்



Comments are closed.