தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து

- Advertisement -

தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து

 

தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றியவர்களை அங்கீகரிக்கம் அளிக்கும் வகையில் இந்த தகைசால் தமிழர் விருது உருவாக்கப்பட்டது.

அதன்படி 2021ம் ஆண்டு தொடங்கி கடந்த 4 ஆண்டுகளில், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகைசால் தமிழர் விருதாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை திருச்சியில் அவரது இல்லத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.மேலும் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தும் “மணிச்சுடர்” 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் அமைச்சரிடம் வழங்கினார்.

 

இதனை பெற்றுக்கொண்டு, அவர் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை” நூலினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்