திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் “பியர்ல்ஸ் டவர்” திறப்பு விழா – கோவிந்தராஜுலு பங்கேற்பு!
திருச்சி பழைய கரூர் சாலை ராமமூர்த்தி நகரில் (கலைஞர் அறிவாலயம் எதிர்புறம்) “பியர்ல்ஸ் டவர்” என்னும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பேரமைப்பின் திருச்சி மண்டலத் தலைவர் தமிழ் செல்வம், திருச்சி மாவட்டத் தலைவர் ஶ்ரீதர், மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், செயலாளர் செந்தில் பாலு, திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க செயலாளர் வெள்ளையப்பன், வெங்காய மண்டி செயலாளர் தங்கராசு ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை பியர்ல்ஸ் டவர் சார்பில் ராமலிங்கம், ராஜ்குமார், வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர். மேலும் இந்நிகழ்வில் பேரமைப்பின் சேர்ந்த துணைத் தலைவர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.