திருச்சியில் எல்.ஐ.சி தொழில்முறை முகவர் கிளை அலுவலகம் திறப்பு விழா – சென்னை மண்டல மேலாளர் பங்கேற்பு!
திருச்சி ரயில்நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் தொழில்முறை முகவர் கிளை நவீனமயமாக்கபட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சியின் தென்மண்டல முதன்மை பொறியாளர் R.S. சௌத்ரி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை மண்டல மேலாளர் G.வெங்கட்ரமணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.



முன்னதாக வணிக மேலாளர் சூரஜ் குமார் வரவேற்புரையாற்றினார். முதுநிலை கோட்ட மேலாளர் சுஜித் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை ஆலோசகர்கள், முகவர்கள் கௌரவிக்கபட்டனர். இறுதியாக தொழில்முறை முகவர் கிளை மேலாளர் செல்வராஜூ நன்றி கூறினார். இந்நிகழ்வில் எல்.ஐ.சி அலுவலர்கள், முகவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









