பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் – எந்த தொகுதி என்பதை தலைமை முடிவெடுக்கும் -அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் பேட்டி

- Advertisement -

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபரும் அமைச்சர் கே என் நேருவின் மகனுமான அருண் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்..
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு…
தேதி வந்த பிறகு நானே உங்களுக்கு  சொல்கிறேன். விரைவில் மக்களை சந்திப்பேன். தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு. எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிடுவேன் என சூசகமாக தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்