மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது!

மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது!

 

திருநெல்வேலி மாநகர காவல், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ் அலி மகன் நசீம் உசேன் ( வயது.35) என்பவரின் மனைவி, கர்ப்பிணியாக இருந்து வந்ததாகவும், அவருக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில், அவரை மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு நிலைய மருத்துவர் அறிவுறுத்தியும், வராத நிலையில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி.6)

Bismi

இரவு நேரத்தில் நசீம் உசேன், தன்னுடய மனைவிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அவ்வாறு இறந்த குழந்தையின் உடலை, தனது வீட்டுக்கு அருகில் உள்ள, காட்டு ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில், அவசரம்- அவசரமாக அடக்கம் செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த, மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சுமதி, இது பற்றி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் எஸ். செந்தில் தங்கதுரை தலைமையிலான போலீசார், உடனடியாக வழக்கு பதிவு செய்தனர். காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து, நசீம் உசேனிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், மேலப்பாளையம் மாநகரம் முழுவதும், மிகுந்த பரபரப்பு நிலவியது.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்