- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் – அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுகவினர் மலரஞ்சலி!

0

- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம், அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் குளுமணியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சிலை முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில், அமைப்பு செயலாளர் வளர்மதி முன்னிலையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது. அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய இணை செயலாளர் சுபிதா மதிவாணன், ரெங்கராஜ், காமாட்சி, கணேஷ், தவசி, அங்குதாஸ், அன்பரசு உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Vagai
Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்