திருச்சியில் நடந்த மாநில சீனியர் தடகள போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது

0

96-வது மாநில சீனியர் தடகள போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் சி.வி.பி.அகாடமி 90 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை 51 புள்ளிகள் பெற்ற எஸ்.டி.ஏ.டி. அணி பெற்றது. பெண்கள் பிரிவில் ஸ்பார்க் அகாடமி 63 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சி.வி.பி. அகாடமி அணி 62 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

மொத்தத்தில் 10 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 152 புள்ளிகள் பெற்ற சி.வி.பி. அகாடமி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சி.வி.பி. அகாடமி வீரர் யுகேந்திரன் போல்வால்டில் 5.16 மீட்டர் உயரம் தாண்டி தங்க பதக்கம் வென்றதுடன், புதிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தடகள சங்க மாநில இணை செயலாளர் லதா, திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன், பனானா லீப் உரிமையாளர் மனோகரன் ஆகியோர் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Bismi

இதில் மாவட்ட தடகள சங்க செயலார் ராஜு, செய்தி தொடர்பாளர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சி.வி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளார்.

இந்நிலையில் சி.வி.பி. அகாடமி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து, அண்ணா விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்….

திருச்சியில் மூன்று நாட்களாக நடந்த மாநில தடகள போட்டியில் காவல்துறை, வருமானவரித்துறை, ரெயில்வே மற்றும் பல்வேறு அகாடமிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சி.வி.பி. அகாடமி அதிக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இந்த ஆண்டு பெற்றுள்ளது.

இதற்காக மிக கடுமையாக பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சி.வி.பி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும், இந்த வீரர், வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வாகி, சர்வதேச அளவிலும், ஒலிம்பிக் என பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வெல்வதற்கு எங்களது அகாடமி துணை நிற்கும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்