மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும் விழா
மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும் விழா
திருமயத்தில் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகமும் உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கும் விழா
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது, பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் வருகை தந்த அனைவரையும் வீரமணி வரவேற்று பேசினார்

சிறப்பு விருந்தினராக மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாநில தலைவர் வினோத் குமார், மாநில பொதுச் செயலாளர் ஆரணி ராஜன், மாநில சட்ட ஒழுங்கு அணித் தலைவர் சத்திய குமார், சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர்.

மற்றும் மாநில நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துரை வழங்கினர்,
மேலும் மண்ணின் மைந்தர்கள் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்பி சரவணன், திருமயம் வட்டாட்சியர் வரதராஜன், திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.பி கருப்பையா, வழக்கறிஞர் கருணாநிதி,
ஜமாத் தலைவர் வி எஸ் எஸ் ஜாகிர் உசேன், ரோட்டரி சங்கத் தலைவர் அன்புமணி, எய்ம் அறக்கட்டளை நிறுவனர் எம் சைமன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்,
மக்கள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





Comments are closed.