- Advertisement -

பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவதற்கு தோல்வி பயமே காரணம் – திருச்சியில் எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

0

- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் எல்லோருக்கும் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டூர் எம்.ஐ.இ.டி கல்லூரி அருகே இன்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கழக துணை பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி & உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Vagai

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில்…

திமுக மறைந்த முன்னாள் தலைவர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதி நிலை அறிக்கை வெளியிட்டு பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏன் என்று சொன்னால் இத்தகைய சிறப்பான பொதுக்கூட்டம் நடைபெறும் இதே நாளில் திருச்சியில் திராவிட இயக்கத்தை வலிமைப்படுத்தி வளர்த்த அன்பிலார் அவர்களின் 31 வது நினைவு தினம் இன்று ஆகும்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தென்பாண்டி சிங்கம், எளிமையாக பழகக்கூடிய தங்கம், தென் தமிழ்நாட்டின் திமுக கோட்டையாக உருவாகியதில் அதிகம் பங்கு கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

திராவிட கழகம் அரசியலில் கால் பதிக்கலாமா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை எடுக்கக்கூடிய மாநாடு நடைபெற்றது திருச்சியில் தான். அன்றே சொன்னார் அண்ணா அவர்கள் அன்பில் அழைக்கிறார் திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று. திராவிட இயக்கம் மாபெரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் திருச்சியாக அமைந்தது.

திருவெறும்பூர் தொகுதியில் எனக்கு வாக்களித்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த உங்களுக்கு நான் சேவகன், என்றும் வேலைக்காரன் நீங்கள் சொல்வதை செய்து முடிப்பவன் நான் என்றார்.

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் நான் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ, கழகத்தின் நிர்வாகியாகவோ, பேசுவேன். ஆனால் இங்கு திருவெறும்பூரில் பேசும்போது உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்துக் கொண்டுதான் பேசுவேன்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று அவர்களின் பொய்யான வாக்குறுதிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் திமுக அழிந்து விடும் என்று கூறி இருக்கிறார், திமுகவை அழிக்க நினைத்த அனைவரும் அழிந்து போய் உள்ளார்கள் என்பது அவருக்கு தெரியாது.

குறிப்பாக நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து நமது குடும்ப பிள்ளைகளான 22 பேர் தற்கொலைக்கு பாஜக அரசு தான் முக்கிய காரணம்.

தமிழ்நாட்டின் ஆளுநர் மூலமாக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். மோடி அவர்களுக்கு பயம், அதாவது தோல்வி பயம் வந்ததால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார் மக்களை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல நிச்சயம் வருகின்ற தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்பார்கள் ஒரு இடம் கூட வெற்றி பெறாத சூழ்நிலை உருவாகும்.

அதே சமயம் நம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்து சேவை, இல்லம் தேடி கல்வி, என்று தினந்தோறும் ஒவ்வொரு புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். நாளை நீங்கள் நலமா என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளார் அதன் மூலம் அரசு துறையை சேர்ந்த அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் தொலைபேசி மூலமாக மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு உரிய தீர்வை காணும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதனால் இனிமேல் மக்கள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

Bismi

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டை பாஜகவிற்கு விற்று விட்டார்கள். குறிப்பாக மாநில உரிமையை விற்று விட்டார்கள் என்று சொல்லலாம்.

ஆகையால் பொதுமக்கள் தங்களுடைய வாக்குகளை தேர்தல் நேரத்தில் செலுத்துவதற்கு முன்பாக, ஏற்கனவே நாம் வாக்களித்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த கட்சிகள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நினைத்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பள்ளிக்கு என்னை நம்பி அனுப்புங்கள், கல்லூரிக்கு அமைச்சர் உதயநிதியை நம்பி அனுப்புங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இந்த திராவிட மாடல் அரசு அவர்களின் வாழ்க்கை உயர்வதற்கு என்றும் துணை இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன் என்றார்.

ஆகையால் வருகின்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 40/40 நமக்கே என்ற எண்ணத்தில் செயலாற்ற வேண்டும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக அல்லது கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள் யாரும் நின்றாலும் அந்த இடத்தில் நமது மறைந்த தலைவர் டாக்டர். கலைஞர் வேட்பாளராக நிற்கிறார் என்று நினைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்…

இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக நமது மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். தமிழ்நாட்டின் மகளிர்க்காக திமுக அரசு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயலாற்று வருகிறது. குறிப்பாக மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை தாண்டி, நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வித்துறை, வேலை வாய்ப்பு, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமூக நீதியை கடைப்பிடித்து அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றி வருகிறார்.

மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே, 18 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்போடு முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கியுள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சேதம் அடைந்த வீடுகளை சீரமைப்பு செய்ய நிதிகள் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது போன்ற மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் அந்த அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

கலைஞர் இல்லம் என்ற திட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீடு கட்டி தரபட உள்ளது.

மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்றார்கள், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், கருப்பு பணத்தை அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என அறிவித்தார்கள். இது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை மக்களிடையே வழங்கி எதையும் நிறைவேற்றாத அரசுதான் பாஜக அரசு. மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது என்றார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை, தமிழ்நாட்டில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சென்று பார்த்து ஆறுதல் கூறவில்லை, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதிகளை முறையாக ஒதுக்கீடு செய்யவில்லை, ஆகையால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர எந்த யோக்கிதையையும் இல்லை என தெரிவித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் மோடி என குற்றம் சாட்டினார். பாஜகவிற்கு வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு அலைகள் வெளிவரும்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் முறையாக செயல்படுத்தவில்லை, மாறாக அதிக கடன்களை மட்டுமே நிலுவையில் வைத்துவிட்டு சென்றார்கள். அதையும் சமாளித்து, தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துக்கொண்டு செல்பவர்கள் தான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவார். அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சரமாக இருந்த விஜயபாஸ்கர் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படாது என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா காலத்தில் அதிமுக ஆட்சியில் உரையாக தடுக்க பணிகளை மேற்கொள்ளாததால் எண்ணற்ற மக்கள் இறந்தார்கள். அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு சென்று சேர்த்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தி, முழுமையாக தமிழ்நாட்டில் இருந்து கொரோனாவை விரட்டுவதற்கு திமுக அரசு செயல்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.

தினந்தோறும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தேவைகளை நன்கு அறிந்து செயல்படக்கூடிய ஒரே முதல்வர் நமது மு.க. ஸ்டாலின் மட்டுமே ஆவார்.

திமுக அரசு ஆட்சி ஏற்ற பிறகு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, பின்பு தொடர்ந்து வலியுறுத்தி தற்போது அந்த மசோதாக்களின் கோப்புகள் ஜனாதிபதி அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் 40 க்கு 40 திராவிட முன்னேற்றக் கழக அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதேபோல் இந்திய அளவில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அதிமுக ஆட்சியில் இழந்த மாநில உரிமையை நாம் முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்றார்.

தமிழ்நாட்டின் மாநில உரிமையை மீட்டெடுக்க முதல்வர் மு க ஸ்டாலின் அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறார், அவருக்கு நாம் அனைவரும் துணை நின்று தேர்தலில் வெற்றியை பெற்று தருவோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்