திருச்சி காட்டூரில் 1.20 கோடி மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்திற்கான பூமி பூஜை விழா – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!
திருச்சி காட்டூரில் 1.20 கோடி மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பூமி பூஜை விழா – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூர் பாப்பாக்குறிச்சி பிரதான சாலையில் 15வது நிதிக்குழு நல நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மண்டல குழுத்தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

