தந்தை பெரியார் பிறந்த நாள் விழா; திருச்சி வருகை தரும் முதல்வர் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா; திருச்சி வருகை தரும் முதல்வர் – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க உள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று காலை முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Comments are closed.