விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வழங்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர வேண்டும் எனவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கிராமங்கள் தோறும் விற்பனை மையங்கள் அமைக்க வலியுறுத்தியும், டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளும் விவசாயிகளை தாக்கும் மத்திய அரசை கண்டித்தும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இவர்களை ரயில் நிலைய நுழைவாயிலிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.