கருக்கலைப்பிற்கு வந்த பெண் இறப்பு – திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீது வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குற்றவியல் வழக்கறிஞர் உறுப்பினர் சண்முகப்பிரியா (29) இரண்டு தினங்களுக்கு முன்பாக கரு கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு முடிந்த பிறகு மதியம் 12 மணி அளவில் திடீரென்று அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இயற்கை எய்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வழக்கறிஞர்கள் மத்தியில் பரவியது. கருக்கலைப்பிற்காக வந்த பெண் இறந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறி வழக்கறிஞர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர்.
இது குறித்து குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் செய்தியாளர்களிடம் கூறுகையில்….
மூன்று மாத கரு கலைப்பிற்காக வந்த 29 வயது பெண் எப்படி ஹார்ட் அட்டாக்கில் இறந்திருக்க முடியும் என அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டோம். அதில் ஒரு மருத்துவர் கோபமாக உங்களுக்கு தேவைப்பட்டால் போராட்டம் பண்ணுங்கள் என்று எங்களிடம் கூறி சென்றார். திருச்சியில் 4000 வக்கீல்கள் உள்ளனர். இதே போல் கோபி கண்ணன் என்ற வழக்கறிஞரின் மனைவி தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அதை நாங்கள் விட்டுவிட்டோம். ஆனால் இன்று வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து நாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி இறந்து போன எங்கள் வழக்கறிஞர் உடலை எடுத்து சென்றோம். வழக்கறிஞர் ஆகிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்கள் இதே போல் ஒன்று சேர்ந்து கேட்பார்களா என்று சொல்ல முடியாது. பணம் கொடுத்தால் தான் உடலை எடுத்துச் செல்ல முடியும் என்று சொல்வார்கள். வழக்கறிஞர்கள் தவறு செய்தால் பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.
அதேபோல் மருத்துவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை. இது ஆரோக்கியமான செயலாக தெரியவில்லை. மருத்துவத்தில் குறைபாடு உள்ளது. சொத்தைத் தவிர மற்ற அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து வாங்குகிறார்கள். மருத்துவமனை மீது தவறு இருந்தால் கண்டிப்பாக வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.
Comments are closed.