ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்ற முடியாது , திமுக, அதிமுக கூட்டு களவாணிகள் -சீமான்
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்ற முடியாது , திமுக, அதிமுக கூட்டு களவாணிகள் -சீமான்
திருச்சி விமான நிலையத்தில் சீமான் பேட்டி,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடை பயணத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படம் பிறந்ததால் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது என்ற கேள்விக்கு?

ராஜீவ் காந்தியை கொண்டுவிட்டோம் என்பார்கள்.தன் இனத்திற்காக போராடிக்கொண்டு இருந்த இன மக்களை இந்திய நாட்டு ராணுவத்தை அனுப்பி 20000 பேருக்கு மேல் கொன்று குவித்தது. இங்கிருந்து ராணுவத்தை அனுப்பியவர் ராஜீவ் காந்தி. தேசிய இனத்தின் விடுதலை கனவை அழித்த கட்சி காங்கிரஸ் கட்சி. எந்த இன மக்களை கொன்றார்களோ அந்த தமிழ் மக்கள் வாக்கை வாங்கி ஆட்சி அமைத்த கட்சி காங்கிரஸ். தமிழ் மக்களை கொன்ற கட்சியோடு கூட்டணி இல்லை என சொல்ல வேண்டும் அப்படி சொல்லவில்லை அதனால் தான் அவர்கள் இப்படி செயல்படுகிறார்கள்.
திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரி இல்லை என வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு?
தமிழ் தேசியத்திற்கு திராவிடம் எதிரியான கூறியவர் திருமாவளவன் தான். 2006 அதற்கு முன்பு அவர் பேசியதை எடுத்துப் பாருங்கள். இல்லாத திராவிடம் எப்படி தமிழ் தேசியத்தை எதிர்க்கும் என பேசியவர் திருமாவளவன் அப்போது நான் அந்த மேடையில் கீழே அமர்ந்து பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன். திராவிடம் எங்கே தமிழை காக்கிறது என நீங்களே சொல்லுங்கள். 75,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வி பெற்றுள்ளனர் தமிழ் எழுத தெரியாத பேசத் தெரியாத படிக்கத் தெரியாத மூன்று தலைமுறையை உருவாக்கி விட்டு தமிழ் வளர்கிறது என பேசுவது பைத்தியக்காரத்தனம். தமிழ் மொழி பண்பாடு, கலை,வரலாறு, அரசியல் எதுவும் இல்லை எப்படி திராவிடம் தமிழ் மொழியை பாதுகாக்கிறது என கூறுகிறீர்கள். இந்தி எதிர்ப்புக்கு திராவிடத்திற்கும் என்ன சம்மந்தம் உள்ளது. இந்திய எதிர்ப்புக்கு போராடியவர்கள் இளைஞர்கள் அவர்களை சுட்டு தள்ளுங்கள் என கூறியவர் பெரியார். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இறுதி உள்ளது எங்கே எதிர்க்கிறோம் என திமுக சொல்வது நாடகம். எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது இந்தி தெரியாத கோடாய் என வசனம் பேசினார்கள் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஆனால் தற்போது பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.

பெரியார் அண்ணா இல்லையென்றால் தமிழர்கள் இந்திவாலா வாக மாறி இருப்பார்கள் என திருமாவளவன் கூறுவது,அவர் மாற்றி மாற்றி பேசுகிறார்.
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி உள்ளது எப்படி தமிழர்கள் ஹிந்திக்கு மாறி இருப்பார்கள். இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பக்தர்களிடம் தவறான வார்த்தைகள் பேசியது குறித்த கேள்விக்கு?
அமைச்சர் அப்படி பக்தர்களிடம் கடுமையாக பேசக்கூடாது. என்ன காரணமாக இருந்தாலும் பக்தர்களிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. அறநிலையத்துறை அமைச்சர் அறம் இல்லாத அமைச்சராக இருக்கிறார்.பொங்கல் தொகுப்பில் பணம் அறிவிப்பு இல்லாதது நிதி இல்லாததை குறிக்கிறது. இன்னும் என் மக்கள் கரும்பு அரிசிக்கு பணத்திற்கும் கையேந்துகிற சூழல் இருப்பதை நான் அவமானமாக பார்க்கிறேன். பொது மக்களையும் விவசாயிகளையும் ஏமாற்றுகின்ற விஷயமாக இதை பார்க்கிறேன். தன்மானத்திற்காக ஒரே வீட்ட இனம் தமிழ் இனம் இப்படிப்பட்ட ஒரு சூழலை எப்படி பெருமையாக பார்க்க முடியும். அவமானம் ஒரு அடையாளமாக வாழ்கிறது என்ற வலி இருக்கிறது.
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது கொடும் துயரம் 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிக்கு வாக்களிக்கின்றனர் ஆசிரியர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்க எப்படி அவர்களுக்கு தோன்றுகிறது என தெரியவில்லை அவர்கள் வாக்களித்ததன் விளைவாகத்தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த போராட்டங்களின் எதிரொலியாக வருகின்ற தேர்தலில் தான் அவர்கள் இதை காட்ட வேண்டும்.தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள்,தூய்மை பணியாளர்கள்,ஆசிரியர்கள் எல்லோரும் வீதியில் வந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.ஆனால் நல்லாட்சி கொடுத்துவிட்டோம் என கூறுவது எப்படி சாத்தியம். இந்தப் போராட்ட குணம் வாக்கு செலுத்தும் போது இருக்க வேண்டும்.போதையை தடுப்பை பற்றி பேசுவதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்கிறதா?
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது என தமிழக முதல்வர் பேசுவதற்கு எதற்கு அதிகாரம். போதைப் பொருள் நாட்டிற்குள் வருகிறது என கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? கல்லூரி பள்ளிவாசலில் போதைப்பொருள் விற்கிறது காவல்துறை அனுமதி இல்லாமல் எப்படி விற்க முடியும்.
போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும், முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது தெருவுக்கு தெரு மது கடைகளை திறந்து விற்பனை செய்கின்றனர்.தேர்தல் அறிக்கை என்பது மக்களை சந்தித்தான் கேட்க வேண்டும்.கடந்த ஆட்சியில் மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் எவ்வளவு நிறைவேற்றப்பட்டது என கூற வேண்டும்.
காங்கிரஸ் பாஜக கட்சிகளுக்கு எந்த கோட்பாடுகளும் இல்லை. தீமைக்கு எதிர் நேர்மைதான் என நபிகள் கூறியுள்ளார். திமுகவை தவிர்த்து அதிமுக வந்தால் எந்த மாற்றமும் இருக்காது . கொள்கையில் மாற்றம் இல்லை இரண்டு பேரும் திருடர்கள் தான். கொடநாடு கொலை வழக்கில் திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவும் ,அதிமுகவும் கூட்டு களவாணிகள். ஆயிரம் அமித்ஷா வந்தாலும் அப்படிதான் இருக்கும். நீங்க திராவிடர்கள் நாங்கள் தமிழர்கள். மாற்று என்பது நாங்கள் தான் என்றார்.





Comments are closed.