பாரத் மாதா கோஷத்தால் கோபத்தில் கொந்தளித்த சேகர் பாபு!

சுசீந்திரம் தேர் திருவிழாவில்!

பாரத் மாதா கோஷத்தால் கோபத்தில் கொந்தளித்த சேகர் பாபு!

சுசீந்திரம் தேர் திருவிழாவில்!

Bismi

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைக்க இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.பி விஜய்வசந்த் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.தேரோட்டம் நிகழ்ச்சியின்போது அமைச்சர் சேகர் பாபுவை நோக்கி பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.அதில் சிலர், ‘பாரத்மாதாகீ ஜெய்’ என்றும், ‘வீரசிவாஜீக்கு ஜெய், வீரசவார்க்கருக்கு ஜெய்’ என கோஷமிட்டதால் ஆத்திரமடைந்து, அமைச்சர் சேகர் பாபு, “சோத்தைத் திங்கிரியா இல்லை… திங்கிறியா” எனக் கேட்டு கொந்தளித்தல் பரபரப்பு ஏற்பட்டது.முன்னதாக இந்து அமைப்பினர் சிலர், அமைச்சர்கள் முன்பு “பாரத் மாதா கீ ஜே” என முழங்கினார். இதையடுத்து அவர்களை சேகர்பாபு கண்டித்தார். எனினும் அவர்கள் அதை கேட்காமல் மீண்டும் மீண்டும் அந்த கோஷத்தை எழுப்பினர்.அங்கிருந்த பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கோயில்களில் வன்சொல் சொல்லக் கூடாது, புறம் பேசக் கூடாது, தெய்வத்தை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற பக்தர்கள் கடைப்பிடித்து வரும் நிலையில் சேகர்பாபு இவ்வாறு பேசியது பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர் சேகர் பாபு அங்கிருந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

“இறையன்பர்களின் வசதிக்காக எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்துசமய அறநிலையத்துறை செய்துவருகின்ற பல காலங்களில் சிறந்த காலமாக இந்த ஆட்சியினுடைய காலத்தை எடுத்துக்கொள்ளலாம். எங்களின் இறைப்பணி தொடரும்.இறைவனை வழிபடுகின்ற நேரத்தில் பிரிவினைகள் வேண்டாம். இறைவழிபாடில் தகாத கோஷங்கள் எழுப்ப வேண்டாம். இறைவழிபாட்டை அமைதியான முறையில் கடைபிடியுங்கள் என்று, தேவையற்ற கோஷங்களை எழுப்பிய நண்பர்களுக்கு என்னுடைய வேண்டுகோளாக கூறுகிறேன். துறை சார்ந்த அமைச்சர் என்பதால் இதை அவர்களுக்கு கனிவுடன் வேண்டுகோளாக வைக்கின்றேன்” என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்