திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின இலட்சார்சனை விழா அக்.05 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏகதின இலட்சார்சனை விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து காலை 8.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஏகதின இலட்சார்சனை விழா நடைபெறுகிறது. பின்னர் இரவு 8.05 மணிக்கு மஹா தீபாராதனையுடன் இலட்சார்சனை விழா நிறைவு பெறுகிறது.

- Advertisement -

காலை 9 மணி முதல் இலட்சார்சனை பிரசாதம் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் தி.சுந்தரி, செயல் அலுவலர் ல.பொன்மாரிமுத்து, அர்ச்சகர் வா.கோகுல் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் அனைவரும் புரட்டாசி 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு இத் திருக்கோவிலில் நடைபெற உள்ள ஏகதின இலட்சார்சனை விழாவில் கலந்து கொண்டு ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் அருளை பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்