முன்னாள் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, சசிகலா அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என மூன்றாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும், அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என திருச்சி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சசிகலா பேரவை தலைவர் ஒத்தக்கடை செந்தில் திருச்சி ரயில் நிலையம் எதிரே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
அதிமுக என்பது ஒரு குடும்பம். குடும்பத்தில் 5 பேரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். அதிமுக ஒன்றிணைந்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என தெரிவித்தார்.